நாளை முதல் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்..கிலோ மீட்டருக்கு எவ்வளவு தெரியுமா? வெளியான அறிவிப்பு!

M K Stalin Tamil nadu DMK
By Vidhya Senthil Jan 31, 2025 04:00 AM GMT
Report

    நாளை முதல் ஆட்டோகளுக்கு புதிய கட்டணத்தை வசூலிக்க உள்ளதாக ஓட்டுநர் சங்கங்கள் அறிவித்துள்ளன.

 ஆட்டோ

கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தைத் திருத்தியமைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்

இதனையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆட்டோ கட்டண நிர்ணயம் தொடர்பாகத் தமிழக அரசுடன் ஆலோசித்து முடிவெடுக்கும்படி தீர்ப்பளித்தது.இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்த கூட்டமைப்பினர் தற்பொழுது ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்துள்ளனர்.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு? அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை!

புதிய கட்டணம்

மேலும் நாளை முதல் ஆட்டோக்களுக்கு 1.8 கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், கூடுதல் கிலோமீட்டருக்கு 18 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாளை முதல் ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம்..கிலோ மீட்டருக்கு எவ்வளவு தெரியுமா? வெளியான அறிவிப்பு! | Auto Price To Be Increased From Tomorrow

இந்த சூழலில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்த முடியாது எனப் போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அதன்படி, ஆட்டோ கட்டணத்தை அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.