முதல்வர் ஸ்டாலின் மகனாக இல்லாமல்..உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது? தமிழிசை அட்டாக்!
முதல்வர் ஸ்டாலின் மகனாக இல்லாமல் இருந்திருந்தால் உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது? என தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
உதயநிதி
செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்வு செய்யப்படாத ஒருவர், பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் பதவியில் இருக்கிறார். தமிழக அரசு தயாரித்து கொடுக்கும் உரையைப் படிப்பது தான் வேலை.
ஆனால் ஆளுநருக்குச் சட்டமன்றத்தில் நடைப்பயிற்சி செல்வது மட்டுமே ஒரே வேலை.வருவார்.. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்.. அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போய்விடுவார். மேலும் ஆளுநர் தபால்காரர் வேலையை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி பேசியிருந்தார்.
தமிழிசை
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் ,’. மாநிலத்தின் ஓராண்டு செயல்திறனை வெளிப்படுத்தும் விதமாகத் தான் தமிழகம் சரிவு பாதையை நோக்கிச் செல்வதாக ஆளுநர் தெரிவித்திருக்கிறார். இதை மக்கள் அப்படி தான் நினைக்கின்றனர்.
ஆளுநர் தபால்காரர் வேலையை மட்டும் தான் பார்க்கவேண்டும் என்கிறார் துணை முதல்வர் உதயநிதி. முதல்வர் ஸ்டாலின் மகனாக இல்லாமல் இருந்திருந்தால் உதயநிதிக்கு என்ன அடையாளம் இருக்கிறது? எனவே ஆளுநரைப் பற்றிப் பேசுவதற்கு உதயநிதிக்குக் கொஞ்சம் கூட தகுதியில்லை என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.