பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை.. தமிழக அரசின் சட்ட மசோதா - ஒப்புதல் அளித்த ஆளுநர்!
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமை
மத்திய அரசு கடந்த 2023 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) ஆகிய சட்டங்களைத் திட்டங்களைக் கொண்டு வந்தது.
இது தமிழகத்திற்குப் பொருந்தும் வகையில் 2 சட்ட மசோதாக்களைக் கடந்த 10-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த மசோதாவில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்கொடுமை செய்வது,18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்வது ஆகிய குற்றங்களுக்கு கடுங்காவல் அல்லது மரண தண்டனை விதிக்க வேண்டும்.
பெண்கள் மீது ஆசிட் வீசினால் கடுங்காவல் ஆயுள் அல்லது மரண தண்டனை, பெண்களைப் பின்தொடர்ந்து கேலி செய்தால் அதிகபட்சம் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் வழிவகை செய்யப்பட்டது.
ஆளுநர் ஒப்புதல்
இது தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதம் நடைபெற்ற பிறகு 11-ம் தேதி மசோதாக்கள் மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன.இந்த நிலையில் தமிழக அரசின் முதல் சட்டம் என்பதால், ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் அரசிதழில் வெளியிடப்பட்டு உடனே அமலுக்கு வந்துள்ளது.மற்றொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளித்த ஆளுநர் நிலையில் அதைக் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.