தக்காளி என் Department இல்லங்க - சிரித்துக் கொண்டே ஓட்டம் பிடித்த மேயர் பிரியா..!
தக்காளி விலை உயர்ந்து வரும் நிலையில் அது குறித்து சென்னை மேயர் பிரியாவிடம் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது அவர் சிரித்துக் கொண்டே ஓட்டம் பிடித்தார்.
தக்காளி விலை உயர்வு
தமிழகத்தில் அண்மை நாட்களாக தக்காளியின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஆனால், நேற்று 40 ரூபாய் குறைந்து கிலோ 130க்கு விற்கப்பட்ட தக்காளி 80, 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தற்போது, மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது, அதன்படி இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.120-க்கு விற்கப்படுகிறது.
தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
ஓட்டம் பிடித்த மேயர் பிரியா
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா மாணவர் சுற்றுலா குறித்து பேசினார்.
பின்னர் அவரிடம் செய்தியாளர் தக்காளி விலை அதிகமாக உள்ளது. மாநகராட்சி சார்பில் தக்காளி விற்பனை செய்யலாமே என கேள்வி எழுப்பினார்.
அதற்கு மேயர் பிரியா தக்காளி என் துறை (Department) இல்லங்க...பள்ளி, மருத்துவமனை, சாலைகள், பூங்காக்கள் பற்றி கேளுங்கள் என்று பதில் அளித்துவிட்டு சிரித்துக் கொண்டே செய்தியாளர் சந்திப்பில் இருந்து சென்றார்.