பெண் கவுன்சிலர்களுக்கு மேயர் பிரியா கடும் எச்சரிக்கை..!
பெண் கவுன்சிலர்கள் தன் கடமை மறந்துவிட்டு தங்களது அதிகாரத்தை கணவர்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வக கருத்தரங்கை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தொடங்கி வைத்தார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,சென்னை மாநகராட்சியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை களைந்து தீர்வு காணும் விதமாக மண்டலம் 4 மற்றும் 5 ஆகியவற்றில் ஆய்வுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
பெண்கள் இரவு நேரங்களில் பாதுகாப்புடன் சாலைகளில் பயணிக்க முதல்கட்டமாக தெருவிளக்கு இல்லாத பகுதிகளில் 69 கோடி ரூபாய் மதிப்பில் தெருவிளக்கு அமைக்கவும், பொது இடங்களில் 33 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கழிவறைகள் ஏற்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்படும் கழிவறைகளை முறையாக பராமரிப்பு மேற்கொள்ளவும், தேவைக்கேற்ப நடமாடும் கழிவறைகள் அமைக்கவும் 5.4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பெண் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரத்தை அவர்களின் கணவர்கள் பயன்படுத்துவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுளள மாமன்ற உறுப்பினர்களுக்கு தங்களின் பணி என்ன என்பது தெரியும்.
யாருக்காக பொறுப்பு வழங்கப்பட்டதோ அவர்கள் தான் பணியை செய்ய வேண்டும். வேறு யாரேனும் தலையிட்டால், மீறினால் தலைமை நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.