மீண்டும் தக்காளி விலை உயர்வு - இல்லத்தரசிகள் வேதனை..!
Tomato
Chennai
By Thahir
இரண்டு நாட்களாக குறைந்து வந்த தக்காளியின் விலை மீண்டும் உயர தொடங்கியதால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மீண்டும் உயர்ந்தது தக்காளி விலை
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. ஆனால், நேற்று 40 ரூபாய் குறைந்து கிலோ 130க்கு விற்கப்பட்ட தக்காளி 80, 90 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
தற்போது, மீண்டும் தக்காளி விலை உயர்ந்துள்ளது, அதன்படி இன்று கிலோவிற்கு ரூ.30 உயர்ந்து ரூ.120-க்கு விற்கப்படுகிறது. தக்காளி விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் பண்ணை பசுமை கடைகளிலும், ரேஷன் கடைகளிலும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது.
இது சென்னையில் மட்டும் நடைமுறையில் இருப்பதால். மற்ற மாவட்ட மக்கள் விலை உயர்வால் வேதனைப்படுகின்றனர்