கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - ஒரு கிலோ ரூ.130

Tomato Chennai
By Thahir Jul 02, 2023 04:51 AM GMT
Report

சென்னை, கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை விற்பனையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது.

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை - ஒரு கிலோ ரூ.130 | Tomato Price Hike In Chennai

மேலும், மொத்த கொள்முதல் விற்பனையில் நாட்டு தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி நேற்று 120க்கு விற்பனையான நிலையில், இன்று மேலும் ரூ.10 அதிகரித்து, 130க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், வியாபாரிகள் முதல் வாடிக்கையாளர்கள் வரை வேதனை அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு: சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை ஆகிறது.

இதற்கு காரணம் வழக்கமாக 1,100 டன் தக்காளி வரும் நிலையில் 400 டன் மட்டுமே வந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.