நீங்க செஞ்சது தப்புங்க.. அப்பயரிடம் எகிறிய ஆஸ்திரேலிய வீரர் - வேட்டு வைத்த ICC!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ வேடுக்கு 2 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ௨௦௨௪ அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கடந்த ஜூன் 8-ம் தேதி நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
அந்த போட்டியில் 18-வது ஓவரை இங்கிலாந்து பவுலர் ஆதில் ரஷீத் வீசினார். அந்த பந்து டெட் பாலாக இருக்கும் என கருதி ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் தவிர்த்தார். ஆனால், டெட் பால் என அம்பயர் நித்தின் மேனன் அறிவிக்கவில்லை.
டிமெரிட் புள்ளிகள்
இதனால் ஆத்திரமடைந்த மேத்யூ வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவதூறாக பேசி அம்பயரிடம் வாக்குவாதம் செய்ததாக ஐசிசி சார்பில் அவர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று மேத்யூ வேட்வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவருக்கு 2 டிமெரிட் புள்ளிகள் (தகுதி இழப்பு புள்ளிகள்) வழங்கப்பட்டது.