பூமியின் 16% நிலத்தை வைத்திருக்கும் ஒரே குடும்பம் - யார் அது தெரியுமா?
பூமியின் 16% நிலத்தை தன்வசம் வைத்திருக்கும் குடும்பம் பற்றி தெரியுமா?
16% நிலம்
இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்கள். கடல் கரைகள் கூட அவர்களுக்கு சொந்தமானதாக உள்ளது.
உலகம் முழுவதும் அவர்களது நிலங்களையும் சொத்துக்களையும் கவனிக்க தனி நிர்வாகமே இயங்கி வருகிறது. அதில் குறிப்பாக பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். ஆனாலும், அவர் உரிமையாளராக இருந்தாலும், தனிப்பட்ட உரிமையாளர் அல்ல.
இங்கிலாந்து அரச குடும்பம்
மன்னராக இருக்கும் வரை இந்த சொத்து அனைத்தும் அவருடையதாக கருதப்படும். உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்துள்ளார். உலகின் மொத்த செல்வத்தில் 16.6 சதவீதம் இவரிடம் உள்ளது. அரச குடும்பம் 250,000 ஏக்கர் நிலத்தை நேரடியாக கையாள்கிறது.
மற்றவை 115,000 ஏக்கர் நிலம் விவசாயம் மற்றும் காடுகளாக உள்ளன. தி கிரவுன் எஸ்டேட் என்ற அமைப்பு இந்த முழு சொத்தையும் கவனித்து பராமரிக்கிறது. 2022ல் இந்த சொத்திலிருந்து 490.8 மில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டப்பட்டது. இந்த சொத்துக்களின் மதிப்பு 15.6 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. (1,22,769 கோடிகள்)
இதற்குப் பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் 8,30,000 சதுர மைல்களை ஆட்சி செய்கிறார். உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.