அரச குடும்பத்தில் இனவெறி - அம்பலப்படுத்திய தம்பதிக்கு உயரிய விருது!

Prince Harry Meghan Markle England
By Sumathi Nov 22, 2022 06:22 AM GMT
Report

ஹாரி - மேகன் மார்கல் தம்பதியினருக்கு மனித உரிமைகளுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹாரி - மேகன் 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ண்டஹ் அமெரிக்கரும் ஹாலிவுட் நடிகையுமான மேகன் மார்க்கல்லை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் அரச குடும்பத்தில் சேர்ந்து வாழ்ந்தனர். பின் திடீரென அரச குடும்பத்தின் இளவரசர், இளவரசி பதிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

அரச குடும்பத்தில் இனவெறி - அம்பலப்படுத்திய தம்பதிக்கு உயரிய விருது! | Harry Meghan Markle Highest Human Rights Award

தற்போது அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறிகையில், "நான் கர்ப்பமாக இருந்தபோது, பிறக்கப்போகும் குழந்தையின் நிறம் எப்படி இருக்குமோ என அரச குடும்பத்தினர் கவலைப்பட்டனர். மேலும், பிறக்கும் குழந்தைக்கு அரச குடும்ப பாதுகாப்பு வழங்கப்படாது, இளவரசர் பட்டம் சூட்டப்படாது என்றெல்லாம் அரண்மனை வட்டாரத்தில் பேசப்பட்டது.

இனவெறி

அரசு குடும்பத்தின் இந்த பேச்சால், தீவிர மன அழுத்தத்திற்கு ஆளானேன். இதனால் பலமுறை தற்கொலை செய்து கொள்ளலாமா என்றுகூட சிந்தித்து இருக்கிறேன். உளவியல் சிக்கல் இருப்பதாக அரச குடும்பத்தினரிடம் கூறினேன். ஆனால் அவர்கள், நீங்கள் அரச குடும்பத்தின் ஊழியர் அல்ல. எனவே உதவ முடியாது என்று கூறிவிட்டனர்.

அரச குடும்பத்தில் இனவெறி - அம்பலப்படுத்திய தம்பதிக்கு உயரிய விருது! | Harry Meghan Markle Highest Human Rights Award

இதையடுத்து, 2020ம் ஆண்டில் இருந்து அவர்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை பக்கிங்ஹாம் அரண்மனை நிறுத்தியது. இங்கிலாந்து அரச குடும்பத்தில் இனவெறி பார்க்கப்படுவதாக இளவரசரே குற்றம் சாட்டியது பேசு பொருளாக மாறியது.

உயரிய விருது

இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு மனித உரிமைகளுக்கான உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமத்துவம், நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் உழைப்பவர்களுக்கு ‘ராபர்ட் எஃப் கென்னடி ரிப்பிள் ஆஃப் ஹோப்’ விருதுகள் வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் இவர்களுக்கு வரும் டிச.6ம் தேதி வழங்கப்பட உள்ளது.