உலகின் பணக்கார அரச குடும்பம் இதுதான் - இங்கிலாந்து குடும்பம் இல்லையாம்.!
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரச குடும்பங்கள் உலகின் பணக்கார அரச குடும்பங்களாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரச குடும்பம்
சவுதி அரேபியாவின் அரச குடும்பம் தான் உலகின் பணக்கார அரச குடும்பம் எனப்படுகிறது. 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டது.
மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் தலைமையிலான சவூதி அரச குடும்பத்தில் 15,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களின் செல்வத்தின் பெரும்பகுதி நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிணறுகளில் இருந்து வருகிறது.
குவைத் அரச குடும்பம்
ஆடம்பரமான அரண்மனை 4 மில்லியன் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆடம்பரமான படகுகள், தனியார் விமானங்கள் மற்றும் விலையுயர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட கார் உள்ளிட்டவை உள்ளன.
இரண்டாவது பணக்கார அரச குடும்பம் குவைத்தில் உள்ளது, மொத்த குடும்பத்தின் மதிப்பு 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். 1000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளனர்.
அதனையடுத்து, மன்னர் மூன்றாம் சார்லஸ் தலைமையிலான இங்கிலாந்து அரச குடும்பம், 88 பில்லியன் அமெரிக்க டாலர்களின் மொத்த நிகர மதிப்புடன், உலகின் பணக்கார அரச குடும்பங்களில் 5 வது இடத்தில் உள்ளது.