திணறிய சவுதி அரேபியா...உலக நாடுகளில் இருந்து திரண்ட 26 லட்சம் மக்கள் - காரணம் என்ன?

Ramadan Saudi Arabia
By Thahir Apr 19, 2023 05:20 AM GMT
Report

ரமலான் மாதத்தை தொடர்ந்து இஸ்லாமியர்களின் புனித தலமான மக்காவில் நேற்று ஒரே நாளில் 2.6 மில்லியன் (26 லட்சம்) இஸ்லாமியர்கள் வருகை புரிந்ததாக ஹரம் ஷரீப்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியர்களின் புனித தளமாக இருந்து வருகிறது சவுதியில் உள்ள மக்கா மற்றும் மதினா நகரங்கள். இங்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரமலான் மாதத்தில் குறிப்பாக இந்த புனித தளத்திற்கு வருவோர் எண்ணிக்கை என்பது அதிகமாக இருக்கும் அதே போன்று இந்தாண்டும் 2.6 மில்லியன் இஸ்லாமியர்கள் வருகை புரிந்துள்ளனர் என்று மக்காவை நிர்வகித்து வரும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புனித லைலத்துல் கத்ர் இரவு

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து இரவு முழுவதும் நின்று வணங்கி இறைவனுக்கு நன்றி செலுத்துவார்கள்.

திணறிய சவுதி அரேபியா...உலக நாடுகளில் இருந்து திரண்ட 26 லட்சம் மக்கள் - காரணம் என்ன? | Suffocated Saudi Arabia 26 Lakh People Gathered

இந்த மாதத்தில் தான் இஸ்லாமியர்களான புனித நுாலான குர்ஆனை இறைவன் இறக்கினான். ரமலான் மாத்தின் ஒற்றை படை இரவுகளான 21,23,25,27,29 ஆகிய இரவுகளில் லைலத்துல் கத்ர் என்ற புனித இரவை தேடி கொள்ளுங்கள் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.

மேலும் குர்ஆனில் இறைவன் லைலத்துல் கத்ர் இரவில் தான் குர் ஆன் அருளப்பட்டது. இந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆண்டு தோறும் இஸ்லாமியர்கள் ரமலான் மாதங்களில் குறிப்பாக கடைசி 10 நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அதிகம் இறைவனுக்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

2.6 மில்லியன் இஸ்லாமியர்கள் வருகை

அந்த வகையில் 27வது இரவான நேற்று முன்தினம் இஸ்லாமியர்களின் புனித தளமான மக்காவில் சுமார் 2.6 மில்லியன் ( 26 லட்சம்) மக்கள் தராவீஹ் என்ற தொழுகையை நிறைவேற்றினர்.

திணறிய சவுதி அரேபியா...உலக நாடுகளில் இருந்து திரண்ட 26 லட்சம் மக்கள் - காரணம் என்ன? | Suffocated Saudi Arabia 26 Lakh People Gathered

இதனால் மக்காவை சுற்றியுள்ள சாலைகள் முழுவதும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தொழுகையில் ஈடுபட்டனர் என்று மக்கா நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது.