சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் - காவல்துறை அறிவுறுத்தல்..!
சென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதிகரிக்கும் கொரோனா தொற்று
தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
சென்னையில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
காவல்துறை அறிவுறுத்தல்
இதனிடையே சென்னையில் பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த,
பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள்,
பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500/- அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகத்திற்கு கொண்டு வர வேண்டும் - வைத்திலிங்கம் பேட்டி..!