புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

COVID-19
By Thahir Jul 02, 2022 11:19 AM GMT
Report

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

முகக்கவசம் கட்டாயம் 

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா தொற்று பரவல் வெகுவாக குறைந்து, தொற்று இல்லாத மாநிலமாக மாறியது. ஆனால், கடந்த 3 வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் தொடங்கியது.

புதுச்சேரியில் முகக்கவசம் கட்டாயம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி..! | Masks Mandatory In Puducherry District Collector

படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் 110 ஆக அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மாநிலத்தில் நேற்று முன்தினம் (30-ம் தேதி) 1,769 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், புதுச்சேரியில் 82, காரைக்காலில் 12, ஏனாமில் 16 என மொத்தம் 110 பேருக்கு தொற்று உறுதியானது.

இதன் மூலம், மாநிலத்தில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 1,66,625 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டு உள்ளார்.