சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்தது - ஐசிஎம்ஆர் அதிரடி தகவல்

chennai decrease mask habit
By Anupriyamkumaresan Nov 25, 2021 09:36 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in ஆரோக்கியம்
Report

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்துள்ளது ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முந்தைய வார இறுதி நாட்களில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 75 இடங்களில் 6130 தனி நபர்களிடம் ஐசிஎம்ஆர் நடத்திய சர்வே முடிவின் விபரம் பின்வருமாறு.

1.தெருக்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற குடிசை பகுதிகள் அருகிலுள்ள வெளிப்புற பொது இடங்களில் 32% பேர் சரியாக முகக்கவசம் அணிகிறார்கள். மற்ற வெளிப்புற பொது இடங்களில் 35% பேர் சரியாக முகக்கவசம் அணிகிறார்கள்.

2. மளிகைக் கடைகள், மருந்துக் கடைகள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற உட்புற பொது இடங்களில் குடிசைப் பகுதிகளில் 14% பேரும், மற்ற இடங்களில் 21% பேரும் முகக்கவ்சம் அணிகிறார்கள்.

சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்தது - ஐசிஎம்ஆர் அதிரடி தகவல் | Chennai Mask Habit Decreased Research Said

3. வணிக வளாகங்களுக்கு வரும் மக்களில் 57% பேர் முகக்கவசம் அணிந்து வருகிறார்கள். மற்றவர்கள் அணிவதில்லை.

4. கொரோனா இரண்டாவது அலை ஏற்பட்டதும் முகக்கவசம் அணியும் பழக்கம் பொதுமக்கள் மத்தியில் பரவலாக தென்பட்டாலும், போகப்போக அப்பழக்கம் குறைந்து விட்டது.

5. சென்னையில் 54 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்தியிருக்கிறார்கள்.