செவ்வாய்க்கு போவதற்கு ரெடியா இருங்க - உறுதியான ஆதாரம்!
செவ்வாயில் நீர் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.
செவ்வாயில் நீர்
நாசா இன்சைட் மிஷனில் அனுப்பியிருந்த உயர் தொழில்நுட்ப கருவி ஒன்று செவ்வாய் கிரகத்தில் நடந்த விண்கல் மோதல் மற்றும் நிலநடுக்கம் பற்றிய தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
இந்த தரவுகளை ஆய்வு செய்ததில், 2021 ஆம் ஆண்டில் S1000a மற்றும் S1094b என இரண்டு விண்கல் மோதல்கள் நடந்தன. அதேபோல 2022ல் நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது.
உறுதியான ஆதாரம்
மேலும், நீர் இருப்பதற்கான அனைத்து சாத்திய கூறுகளும் இந்த தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. விண்கல் மோதல்/நிலநடுக்கம் நேரத்தில் 'ஷியர் அலைகள்' உருவாகியிருக்கின்றன. ஒரு குளத்தில் கல்லை விட்டு எறியும்போது அது எப்படி அலைகளை உருவாக்குகிறதோ,
அதேபோன்ற அலையை விண்கல் மோதலும், நிலநடுக்கங்களும் உருவாக்கியுள்ளன. தண்ணீர் இருக்கும் பகுதியில்தான் இப்படியான அலைகள் உருவாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மிஷன் மூலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட சூப்பர்-சென்சிட்டிவ் சீஸ்மோமீட்டர் எனும் உயர் தொழில்நுட்பம் கொண்ட கருவி என்பது குறிப்பிடத்தக்கது.