விக்குற விலையில் இப்படியா? ஈயத்திலிருந்து தங்கத்தை உருவாக்கி காட்டிய விஞ்ஞானிகள்
இயற்பியலாளர்கள் ஈயத்திலிருந்து தங்கத்தை எடுத்து காட்டியுள்ளனர்.
ஈயத்திலிருந்து தங்கம்
சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் எல்லையில், ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையம், 'லார்ஜ் ஹாட்ரான் மோதல்' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பின் மூலம், பூமிக்கு அடியில் புதைக்கப்பட்ட பெரிய பைப் வழியாக துகள்களை மோதவிடுவார்கள்.
இப்படி செய்வதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும். இந்த இடத்தில் இயற்பியலாளர்கள் ஈயத்தின் துகள்களை அதிவேகமாக மோத வைத்துள்ளனர். ஒரு விநாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கி.மீ வேகத்தில் இந்த துகள்களை மோத வைத்துள்ளனர். இது ஒளியின் வேகம்.
இப்படி செய்கையில் தங்கம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், இப்படி உருவாக்கப்பட்ட தங்கம் மிகவும் குறைவானதாகும். ஒரு கிராம் ஈய துகள்களை நாம் இப்படி மோதவிட்டால் அதிலிருந்து 29 பைக்கோகிராம் அளவுக்குதான் தங்கம் கிடைக்கும்.
விஞ்ஞானிகள் அசத்தல்
1 கிராமில் 29 டிரில்லியன்களில் ஒரு பங்கு என்பதைத்தான் பைக்கோகிராம் என்று சொல்கிறோம். இந்த செயல்முறை கொஞ்சம் காஸ்ட்லியும் கூட. இருப்பினும் தங்கத்தை செயற்கையாக உருவாக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகள் மனித கற்பனையின் வெற்றியாக இது பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மோதல் மூலம் உருவான தங்கம் ஒரு நொடிக்கும் குறைவான நேரம் மட்டுமே தங்கமாக இருந்தது. பின்னர் மீண்டும் ஈயமாக மாறிவிட்டது. இந்த செயல்முறையின் மூலம் நிச்சயம் அதிக அளவில் தங்கத்தை உருவாக்க முடியாதுதான்.
இருப்பினும் இனி வரும் காலங்களில் இதை விட மேம்பட்ட டெக்னாலஜியை கொண்டு தங்கத்தை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு பிறந்திருக்கிறது.
இந்த பூமியில் தங்கம் இருப்பதே அதிசயம்தான். இயற்கையாக தங்கம் தோன்றியிருக்க வாய்ப்பே இல்லை என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். விண்கல் மோதல்கள் மூலம் பூமிக்கு தங்கம் வந்து சேர்ந்திருக்கலாம் என்கின்றனர்.