ஒரு காஃபி கப்பை வைத்து.. கணவரின் தகாத உறவை சொன்ன AI - விவாகரத்து கேட்ட மனைவி
AI சொன்ன ஒரு தகவலால் கணவன் - மனைவி உறவு விவாகரத்து வரை சென்றுள்ளது.
Tasseography
டீ, காபி உள்ளிட்ட உணவுகளை எந்தளவுக்கு எப்படி மீதம் வைக்கிறார் என்பதைப் பொறுத்து ஒருவரது எதிர்காலத்தைக் கணிக்கின்றனர். இதனை டேசியோகிராஃபி என்கின்றனர்.
இதனை கிரீஸ் நாட்டு பெண் ஒருவர் முழுமையாக நம்பி வந்துள்ளார். அதன்படி, தனது கணவர் மீதம் வைத்த காபி கோப்பைகளை போட்டோவாக எடுத்து சாட்ஜிபிடியிடம் கேட்டுள்ளார். அதனை ஆய்வு செய்த சாட்ஜிபிடி, அவரது கணவர் வேறு ஒரு இளம்பெண்ணுடன் தகாத உறவில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
குடும்பத்தில் குழப்பம்
மேலும், அந்தப் பெண்ணின் பெயர் கூட 'E' என்ற எழுத்தில் தொடங்கும் எனக் கூறியுள்ளது. திருமணமாகி 12 ஆண்டுகளுக்கும் மேலான தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த தகவலை முழுதாக நம்பிய பெண் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார்.
இதற்கிடையில் அவரது கணவர் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். ஆனால் அதனை ஏற்காத மனைவி குழந்தைகளை வளர்க்கும் உரிமையும் தனக்கு வேண்டும் எனச் சேர்த்து விவாகரத்திற்குக் கோரியுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அந்த நபரின் வழக்கறிஞர், "நீதிமன்றத்தில் ஏஐ எல்லாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே, இவர் மீதான குற்றச்சாட்டுகள் இப்போது நிரூபிக்கப்படவில்லை, அவை வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரை அவர் எந்தவொரு குற்றமும் செய்யாதவராகவே கருதப்படுவார்" எனக் கூறியுள்ளார்.