வேறொருவருடன் திருமணம்; முன்னாள் காதலனுடன் பெண் செய்த காரியம் - அதிர்ச்சி!
முன்னாள் காதலனுடன் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கதல் விவகாரம்
கர்நாடக மாநிலம் சிந்தாமணி தாலுகா தொட்டபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அனுஷா (19). இவர் அதே கிராமத்தை சேர்ந்த வேணு (21) என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு அனுஷாவின் பெற்றோருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அவரை வேறொரு வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்நிலையில் ஆடி மாதத்தையொட்டி பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்த அனுஷாவும் அவரது காதலன் வேணுவும் குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்து தகவலறிந்து வந்த கெஞ்சர்லஹள்ளி போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில்,
வாழ்க்கையில் இருவரும் சேர முடியவில்லை என்பதால் குட்டையில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.