எமனாக மாறிய ரீல்ஸ் - மனைவியை துண்டுதுண்டாக வெட்டிய கணவன்!

India Telangana Crime Death
By Jiyath Jul 15, 2024 07:15 AM GMT
Report

ரீல்ஸ் வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரீல்ஸ் வீடியோ

தெலுங்கானா மாநிலம் உப்பல் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் பிரதீப் போலா - மதுமிதா (24). இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மதுமிதா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்கைளை வெளியிடுவது வழக்கம்.

எமனாக மாறிய ரீல்ஸ் - மனைவியை துண்டுதுண்டாக வெட்டிய கணவன்! | Husband Killed Wife For Doing Insta Reels

ஆனால், இது அவரது கணவர் பிரதீப் போலாவுக்கு பிடிக்காததால், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், மதுமிதா அவரது பேச்சை கேட்காமல் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரதீப் போலா, மனைவியை கத்தியால் தலையில் வெட்டி கொன்றார்.

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி!

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி!

மனைவி கொலை 

பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு சாக்கு மூட்டையில் கட்டினார். இதையடுத்து அந்த மூட்டையை குளியல் அறையில் வைத்துவிட்டு தனது குழந்தையுடன் தலைமறைவாகி விட்டார்.

எமனாக மாறிய ரீல்ஸ் - மனைவியை துண்டுதுண்டாக வெட்டிய கணவன்! | Husband Killed Wife For Doing Insta Reels

இதுகுறித்த தகவலறிந்து வந்த போலீசார், சாக்கு மூட்டையில் மதுமிதாவின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரதீப் போலாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.