திருமணத்திற்கும் காப்பீடு இருக்கு - தெரியுமா? இல்லனா இந்த செய்தி உங்களுக்கு தான் !!
திருமணம் என்பது பெரும் செலவு செய்யப்படும் நிகழ்வாகவே தற்போது மாறியுள்ளது.
பணம் உள்ளவர்களுக்கு அது எளிதானாலும், பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு திருமணம் பெரும் சவாலான ஒன்று தான். அப்படி கஷ்டப்பட்டு செய்யப்படும் சில திருமணங்கள் அனைத்து வேலைகளும் முடிந்து, தாலி கட்ட வரும் போது திடீரென நின்று போவதும் அவ்வப்போதும் நடந்து வருகின்றது.
அப்படி, தடைப்படும் திருமணத்திற்கென திருமண காப்பீடு உள்ளது உங்களுக்கு தெரியுமா? தெரியாது என்றால், சற்று நேரம் எடுத்து இதனை நீங்கள் படிக்கவும். திருமணம் ரத்தனாலோ, நகைகள், பொருட்கள் திருடு போனாலோ, அல்லது நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக தனிப்பட்ட விபத்து ஏதேனும் ஏற்பட்டால், உங்களுக்கு இந்த திருமணக் காப்பீடு உதவும்.
அதே போல, திருமணத்தில் நிகழ்ச்சியில் கேட்டரிங் செய்பவர்கள் திருமணத்திற்கு முன்பாகவே வெளியேறினால், நமது வைப்புத்தொகையை திரும்பப் பெற்று கொள்ளலாம். திருமண மண்டபத்தில் துவங்கி கேட்டரிங், இசை ஏஜென்சி, அலங்காரம் என அனைத்திற்குமே செலுத்தப்படும் முன்பணத்திற்கும் இந்த திருமண காப்பீடு பொருந்தும்.
ஆனால், விஷயமென்னவென்றால், திருமண தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பே இந்த காப்பீட்டை நாம் பெற வேண்டி இருக்கும். இதன் முழுமுதற் காரணமே, திருமணம் திடீரென ரத்து செய்யப்பட்டாலோ சில எதிர்பாராத நிகழ்வுகளில் திருமணம் நின்றாள், இக்காப்பீடு நமக்கு உதவும்.
ஆனாலும், இந்த காப்பீட்டு பெறுவதற்கு முன், பாலிசியின் அனைத்து விவரங்களையும் தெளிவாக படித்து புரிந்து கொண்டு முகவருடன் உறுதிப்படுத்திக் கொள்வது முறையானதாகும்.