புதுசா இருக்கு..? 5 ரூபாய் Kurkure ரூபத்தில் வந்த விவாகரத்து - புலம்பும் கணவர்
தற்போது பல்வேறு விஷயங்களுக்காக விவாகரத்து பெறுவது வழக்கமாகியுள்ளது.
விவாகரத்து
நேர்மையான - அன்பான துணை இல்லை அதனை சகித்து கொண்டு வாழும் நிலை யாருக்கும் கூடாது. அதனை பலரும் ஆதரிக்கிறோம் என்றாலும், தற்போது விவகாரத்து கேட்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரித்து வருவதாக தகவல் கிடைக்கப்பெறுகின்றன.
இதற்கு முக்கிய காரணம், சரியான புரிதல் இல்லாதது தான். இதனை தாங்களே சரி செய்து கொள்ளும் பொறுமையும் பல தம்பதிகளுக்கு இல்லை என்ற காரணத்தால் தான் பல விவகாரத்து வழக்குகளை நாம் பார்த்து வருகிறோம்.
அப்படி வினோதமான விவாகரத்து வழக்கு ஒன்று தான் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
Kurkure
வாங்கித்தரல உத்தரபிரதேசத்தின் ஆக்ராவில் ஒரு பெண் தனது கணவரிடமிருந்து ₹5 குர்குரே பாக்கெட்டைப் பெறத் தவறியதால் விவாகரத்து கோரி இருக்கின்றார்.
அப்பெண் தினமும் kurkure சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதன் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறுகளும் வந்துள்ளது. இந்த சூழலில், ஒரு நாள் அப்பெண்ணின் கணவர் வீட்டிற்கு kurkure வாங்கி வர மறந்துவிட்டார். இதனால் கோபமடைந்த அப்பெண், வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சில நாட்களுக்குப் பிறகு, விவாகரத்து கோரி போலீஸையும் அணுகி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள கணவர், தினமும் நொறுக்குத் தீனிகளை உண்பதற்கு தனது மனைவிக்கு அடிமையாகி வருவது கவலையளிப்பதாக கூறினார்.
ஆனால் அதற்கு நேர்மாறாக, கணவர் தன்னை அடிப்பதால், தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றதாக மனைவி கூறுகிறார்.