இதெல்லாமா பிரச்சனை - விவாகரத்து வரை சென்ற Lipstick விவகாரம்..?

Uttar Pradesh Divorce
By Karthick Mar 06, 2024 03:10 AM GMT
Report

தற்போதைய சூழலில் அதிகப்படியான விவாகரத்து நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற துவங்கிவிட்டன.

விவாகரத்து

நேர்மையான - அன்பான துணை இல்லை அதனை சகித்து கொண்டு வாழும் நிலை யாருக்கும் கூடாது. அதனை பலரும் ஆதரிக்கிறோம் என்றாலும், தற்போது விவகாரத்து கேட்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் அதிகரித்து வருவதாக தகவல் கிடைக்கப்பெறுகின்றன.

up-couple-almost-gets-divorce-over-rs-30-lipstick

இதற்கு முக்கிய காரணம், சரியான புரிதல் இல்லாதது தான். இதனை தாங்களே சரி செய்து கொள்ளும் பொறுமையும் பல தம்பதிகளுக்கு இல்லை என்ற காரணத்தால் தான் பல விவகாரத்து வழக்குகளை நாம் பார்த்து வருகிறோம். அப்படி வினோதமான விவாகரத்து வழக்கு ஒன்று தான் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.

30 ரூபாய் Lipstick

இந்த தம்பதிக்கு 2022 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன்பிறகு அவர்களுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதில் உட்சகட்டமாக ஒரு மோதல் நடைபெற விவாகரத்து பெரும் முடிவிற்கு வந்துள்ளனர் தம்பதிகள்.

82 வயது மனைவியை விவாகரத்து செய்ய 89 வயது முதியவர் மனு - உச்சநீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா?

82 வயது மனைவியை விவாகரத்து செய்ய 89 வயது முதியவர் மனு - உச்சநீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா?

விஷயமென்னவென்றால், 10 ரூபாய்க்கு lipstick வாங்கி வர சொன்ன மனைவிக்கு 30 ரூபாய்க்கு lipstick வாங்கி கொடுத்துள்ளார் கணவர். இதனால் தான் இவ்வளவு பிரச்னையும்.

up-couple-almost-gets-divorce-over-rs-30-lipstick

இதன் காரணமாக தன் வீட்டுற்கு திரும்பிய மனைவிக்கு ஆலோசனை வழங்கப்பட்ட போது, அவர் கணவர் நிதி நிலையை புரிந்து கொள்ளாமல் இருப்பதாகவும், சேமிப்பதே இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

கணவர் கூறும் போது, தான் சென்ற கடையில் 30 ரூபாய்க்கும் கீழ் lipstick இல்லாத காரணத்தால், அதனையே தான் வாங்கியதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மனைவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது/.