82 வயது மனைவியை விவாகரத்து செய்ய 89 வயது முதியவர் மனு - உச்சநீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா?
விவாகரத்து வழக்கில் உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
விவாகரத்து
பஞ்சாப்பைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி(89). இவருக்கு 1963ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். 1984ல் சென்னையில் ராணுவ வீரராக பணியாற்றிய நிலையில், இந்த தம்பதியின் உறவு சுமூகமாக இருக்கவில்லை.
அதனால். அவர் விவகாரத்தி செய்ய முடிவெடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, விவாகரத்து கேட்டதை மாவட்ட நீதிமன்றம் அனுமதித்தது. ஆனால் பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது.
மனு தள்ளுபடி
அதனையடுத்து, 82 வயது மனைவியிடம் விவாகரத்து கோரி முதியவர் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்தார். அதன்பின், மனைவி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், எனது கணவரை நான் கவனித்து கொள்ள தயாராக இருக்கிறேன்.
அவரை விட்டு செல்லும் திட்டமில்லை. விவாகரத்து பெற்றவராக சாவதற்கு நான் விரும்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அணிருத்தா போஸ், பேலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு 89 வயதான முதியவருக்கு விவாகரத்து வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்தது.