சானியா மிர்சாவுடன் விவாகரத்து - முதன் முறையாக மனம் திறந்த ஷொயிப் மாலிக்
விவாகரத்து குறித்து முதல் முறையாக ஷொயிப் மாலிக் விளக்கமளித்துள்ளார்.
விவாகரத்து
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மாலிக், இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையில், ஷொயப் மாலிக் நடிகை ஒருவரை காதலித்து வருவதாகவும்,
இதனால் சானியா மிர்சாவை விரைவில் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால், இதுகுறித்து இருவரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்நிலையில், ஷொயப் மாலிக் ஜியோ நியூஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
ஷொயிப் மாலிக் விளக்கம்
அப்போது, எனக்கும் சானியா மிர்சாவுக்கும் இடையிலான உறவு குறித்து கடந்த சில மாதங்களாக வதந்தி பரவியது. அதில் உண்மையில்லை. இந்த ரமலான் பெருநாளை சானியா மிர்சாவுடன் கொண்டாட விரும்பினேன். ஆனால் அவருக்கு பணிகள் இருப்பதால் அவரால் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பங்கேறக முடியவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர்பான நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வருகிறார். நாங்கள் எப்போதும் அன்பாக இருக்கிறோம். அவரை மிகவும் மிஸ் செய்கிறேன். இதைத்தான் இப்போதைக்கு என்னால் சொல்ல முடியும் எனத் தெரிவித்துள்ளார்.