சானியா மிர்சா - சோயிப் மாலிக் வாழ்க்கையில் இந்த மாடல் நடிகைதான் முக்கிய காரணமாம்..?

Divorce
By Nandhini Nov 11, 2022 10:58 AM GMT
Report

ரசிகர்கள் ஷாக் சானியா மிர்சா - சோயிப் மாலிக் வாழ்க்கையில் ஒரு மாடல் அழகிதான் முக்கிய காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சானியா மிர்சா - சோயிப் மாலிக்

பிரபல இந்திய டென்னிஸ் வீராங்கனையாக வலம் வந்தவர் சானியா மிர்சா. இவர் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கினார். 6 முறை கிராண்ட் ஸ்லாம் இரட்டையர் பட்டத்தை வென்றவர் இவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை காதலித்து வந்தார். இதனையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதன் பின்னர் 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தார். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் தற்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலமாக சானியா மிர்சா சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வரும் பதிவுகள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளன. அதாவது அவர் தன் மகனுடன் இருக்கும் ஒரு போட்டோவை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இந்த தருணம் என்னை மிகவும் கடினமான நாட்களுக்கு இழுத்துச் செல்கின்றது என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால், கடந்த அக்டோபர் 30ம் தேதி இத்தம்பதிகள் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை மணந்த பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் தம்பதிகள் தற்போது எல்லை தாண்டிய காதல் கதையை முடிவுக்கு வந்துள்ளது. இந்த ஜோடி விவாகரத்து செய்துகொள்ளபோவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வந்தது.

தற்போது இவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளதாகவும், அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். இத்தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இத்தகவலால் சானியா மிர்சாவின் ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்த்துள்ளனர்.

sania-mirza-shoaib-malik-divorce
மாலிக்-மிர்சா பிரிவுக்கு இவர்தான் காரணமாம்..?

மாலிக், மிர்சாவின் குடும்ப வாழ்க்கை பிரிய முக்கிய காரணம் பாகிஸ்தான் மாடல் ஆயிஷா உமர் என்று சொல்லப்படுகிறது. மாடல் அழகி ஆயிஷாவுடன் சோயக் நெருக்கமே மிர்சாவின் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021ம் ஆண்டு சோயப் மாலிக் மற்றும் ஆயிஷா ஓமர் ஒரு போட்டோஷூட்டில் ஒன்றாகக் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய மாலிக், மாடல் அழகியை வெகுவாக பாராட்டினார், படப்பிடிப்பின் போது ஆயிஷா நிறைய உதவி செய்ததாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

sania-mirza-shoaib-malik-divorce