பிடித்த ஆண்களுடன் லிவ்-இன்; பெண்களுக்கு உரிமை கொடுக்கும் பழங்குடியினர் - அதுவும் இந்தியாவில்!
பெண்களுக்கு லிவ்-இன் உறவில் இருக்க உரிமை கொடுக்கும் பழங்குடியினர் குறித்த தகவல்.
பழங்குடியினர்
ராஜஸ்தான் மற்றும் குஜராத்தின் மலைப்பகுதிகளில் கராசியா என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். இந்த பழங்குடியினரில் ஆண்கள் மாறும் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒன்றாக வாழ்கின்றனர்.
மேலும், தாங்கள் விரும்பும் ஆண்களை பெண்கள் கணவனாக ஏற்றுக்கொள்கின்றனர். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்பது அங்கு பரவலாக பார்க்கப்படுகிறது.
இங்கு நடக்கும் ஒரு நிகழ்வில் ஆண்கள் மற்றும் பெண்கள், அவர்கள் விரும்பும் ஒருவருடன் தனித்து வாழத் தொடங்குகின்றனர். அதன்படி திருமணம் செய்து கொள்ளாமலேயே அவர்கள் உடலுறவும் கொள்ளலாம்.
லிவ்-இன் வழக்கம்
பின்னர் அவர்கள் ஊர் திரும்பியதும் பிரம்மாண்ட முறையில் பெற்றோர் திருமணம் செய்து வைக்கின்றனர். ஆனால் அவர்கள் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்தும் செல்லலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பழங்குடியினைத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் வேறு இடத்திற்கு சென்றுள்ளனர். அவர்களில் 3 பேர் இந்திய மரபுப்படி திருமணம் செய்துள்ளனர். அதில் ஒருவர் மட்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவில் இருந்துள்ளார்.
அதில், 3 சகோதரர்களுக்கு குழந்தைகள் இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் லிவ்-இன் உறவிலிருந்த சகோதரருக்கு குழந்தை பிறந்துள்ளது. அப்போதிலிருந்து அங்கு லிவ்-இன் வழக்கம் தொடங்கியதாக கூறப்படுகிறது.