அப்பா பெயரை வைத்து கூப்பிடாதீங்க; பிடிக்கவில்லை - வைரலாகும் தமிழக வீரரின் பேட்டி!

Paris 2024 Summer Olympics
By Sumathi Sep 04, 2024 02:30 PM GMT
Report

மாரியப்பன் அளித்துள்ள பேட்டி ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

மாரியப்பன் தங்கவேலு

3 பாராலிம்பிக்ஸ் தொடர்களில் பங்கேற்று மூன்றிலும் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றை தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.

mariyappan thangavelu

இவருக்கு ரசிகர்களும், நட்சத்திரங்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2016ல் மாரியப்பன் தங்கவேலு அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. எனது வெற்றிக்கு காரணம் சத்யநாராயணா சார் தான்.

என் அப்பா ஒரு மெண்டல்; தோனி குறித்த சர்ச்சை - யுவராஜ் சிங் சாடல்!

என் அப்பா ஒரு மெண்டல்; தோனி குறித்த சர்ச்சை - யுவராஜ் சிங் சாடல்!

வைரல் பேட்டி

இந்த வெற்றிக்கு பின் எனது தாயார் சொல்லும் தகவல்கள் என்னை சோகமாக்குகிறது. ஏனென்றால் கடந்த காலங்களில் எங்களை மதிக்காத பலரும், தாயாரை தேடி வந்து நெருங்குகிறார்கள். எனது தாயையும், 4 குழந்தைகளையும் தவிக்கவிட்டு சென்ற தந்தை, திடீரென உரிமை கோருகிறார்.

சிறு வயதில் எனது தாயை எரித்து கொலை செய்ய முயற்சித்தவர் அவர். எனது அம்மாவுக்கு கொஞ்சம் கூட கருணையே காட்டவில்லை. அவருக்கு என்றுமே என் மனதில் இடம் கிடையாது.

என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும் எனத் தெரிவித்துள்ளார்.