என் அப்பா ஒரு மெண்டல்; தோனி குறித்த சர்ச்சை - யுவராஜ் சிங் சாடல்!
யுவராஜ் சிங் தந்தையை விமர்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை சர்ச்சை பேச்சு
இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ்(63). பல முறை தோனி மற்றும் கபில் தேவ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
அந்த வகையில், யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனி கெடுத்து விட்டார். அவரை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன் என குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யுவராஜ் விமர்சனம்
தொடர்ந்து, தனது தந்தையை யுவராஜ் சிங் தடுப்பதில்லை. தன் தந்தை பேச்சுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு கருத்தையும் அவர் வெளியிட்டதில்லை என்று ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், யுவராஜ் சிங் தன் தந்தையுடன் சேர்ந்து வாழ வில்லை.
தன் தந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக தனது சுயசரிதையில் யுவராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேர்காணலில் ஒன்றில் பங்கேற்ற யுவராஜ் சிங் தனது தந்தை குறித்து பேசியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், தனது தந்தை ஒரு மெண்டல். மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயம் குறித்து தனது தந்தை தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் அதை ஒப்புக்கொள்ளவே மாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.