கணவரை கழட்டிவிட்டு மகனை மணமுடித்த பெண் - அதிர்ந்த மக்கள்!
பெண் ஒருவர் மகனை திருமணம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
ரஷ்யாவைச் சேர்ந்த மெரினா பால்மாஷேவா என்ற பெண், 10 வருடத்திற்கு முன் அலெக்ஸி ஷவிரினை என்பவரை திருமணம் செய்தார். அப்பொழுது அலெக்ஸிக்கு 7 வயதில் விளாடிமிர் என்ற மகன் இருந்தார். மெரினா, தனது கணவர் அலெக்ஸி உடன் இணைந்து பல குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தார்.
இருவரும் 10 வருடம் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் தான் விளாடிமிர் பல்கலைக்கழகத்தில் இருந்து விடுமுறைக்காக வீடு திரும்பிய போது, தனது மகன் என்றும் பாராமல் மெரினா காதலிக்க தொடங்கினார். பின்னர், இருவருக்கும் இடையே கல்லூரி விடுமுறை காலங்களில் நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது.
திருமணம்
இந்நிலையில், இவர்களது உறவு பற்றி அறிந்த அலெக்ஸி மெரினாவை விவாகரத்து செய்தார். அதன்பிறகு, 2020ல் மெரினா தான் காதலித்த தனது வளர்ப்பு மகன் விளாடிமிரை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் 2021ல் பெண் குழந்தை பிறந்தது, அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ந்தார்.
தொடர்ந்து 2022ல் இவருக்கு மற்றொரு குழந்தை பிறந்துள்ளது. இதனை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு மக்கள் பலரும் பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும், தான் வளர்த்த மகனையே திருமணம் செய்து குழந்தைகள் பெற்றுக்கொண்டது அதிர்ச்சிக்குள்ளாக்கியது.