ஆட்டம் அடங்காது.. பேரழிவை சந்திக்கப்போகும் கேரளா, என்ன காரணம்? - நிபுணர் பகீர் தகவல்!

Kerala India
By Vinothini Oct 30, 2023 05:32 AM GMT
Report

நிபுணர் ஒருவர் கேரள மாநிலம் பேரழிவை சந்திக்கும் என்று கூறியுள்ளார்.

பெயர்மாற்றம்

கேரள மாநிலம், இந்தியாவின் கடைசி தெற்கு முனையில் உள்ளது. அந்த காலத்தில் சேரர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் சேர நாடு என்று அழைக்கப்பட்டது. தற்பொழுது கேரளா என்று அழைக்கப்படுகிறது, கேரளா என்றால் மலைச்சரிவு என்பது பொருளாகும். இதனை 67 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.

numerologist-says-kerala-will-meet-disasters

"KERALA என்ற பெயரை KERALAM என்ற டேஞ்சரான ஒரு எண்ணில் மாற்றம் செய்ய ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளார்ள். இனிமேல் தான் அந்த தேசத்தில் ஆட்டமே அடங்காமல் இருக்கப் போகிறது" என்று சில மாதங்களுக்கு முன்பே எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன், கணித்து கூறியுள்ளார்.

கணித நிபுணர்

இந்நிலையில், அவர் "கேரளம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் இயற்கை சீற்றம் அடிக்கடி ஏற்படும். மாநிலத்திற்குள்ளேயே உள்நாட்டு கலவரம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்குள் கடுமையான மோதல், கலகம் ஏற்படும். அடிக்கடி தீ விபத்துக்கள், வாகன மோதல்கள் ஏற்படும். பசிக்கு உணவில்லா பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் புரட்சி ஏற்படும்.

ஜெஎன்எஸ் செல்வன்

பெண்களுக்கு அதிகமான ரத்த நோய்கள் ஏற்படும். கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்து மிரட்டும். மத்திய, மாநில அரசுகளின் மோதல் பெரிய அளவில் உண்டாகும். "கேரளம்" என்ற பெயர் மாற்றத்தால் அந்த மாநிலம் முழுக்க உள்ள கடற்கரை பகுதிகள் பேரலையால் விழுங்கப்படலாம்" என்று கணித்து கூறியுள்ளார்.

இதேபோல் சிலோன் என்ற பெயரை ஸ்ரீலங்கா என்று மாற்றியதால் பல பேரழிவுகளை அந்த நாடு சந்தித்தது என்று தெரிவித்துள்ளனர். மேலும், பெயர் மாற்றத்தால் அதள பாதாளத்திற்கு தள்ளப்படாமல் ஆட்சியாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.