தன் மகளையே திருமணம் செய்த 62 வயது முதியவர்..? - வைரலாகும் வீடியோ - ஷாக்கான நெட்டிசன்கள்...!

Today Gold Price Daily Gold Rates Gold
By Nandhini Jan 04, 2023 07:10 AM GMT
Report
105 Shares

புதுடெல்லியில் தன் மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ளதாக வெளியாகும் வீடியோவால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தன் மகளையே திருமணம் செய்த 62 வயது முதியவர்..?

புதுடெல்லியில் சமீபத்தில் தனது மகளை 62 வயது முதியவர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதாக வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த வீடியோவில், 62 முதியவரும், இளம் பெண்ணும் மாலையுடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்த வீடியோ டிரோல் என்ற டுவிட்டர் கணக்கில் கடந்த டிசம்பர் 25ம் தேதி பதிவிடப்பட்டது. இந்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால், உண்மையாகவே இந்த முதியவர், இளம் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டாரா என்று சந்தேகத்தில் தற்போது உண்மை வெளியாகியுள்ளது.

டெக்பரேஷ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளம் பெண்ணை முதியவர் திருமணம் செய்வதுபோல், மூதாட்டி ஒருவர் இளைஞரைத் திருமணம் செய்துபோன்ற வீடியோவும், 2 பெண்கள் ஒரு ஆணை திருமணம் செய்வது போன்ற வீடியோ நிறைய இந்த பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இப்படியெல்லாம் திருமணம் தொடர்பான வீடியோக்கள் பக்கத்தில் வெளியிட்டால் அதிகம் லைக் கிடைக்கும் என்பதற்காக இப்படி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதியவரை திருமணம் செய்த அந்த இளம் பெண் வேறொரு ஆணை திருமணம் செய்ததுபோல இன்னொரு வீடியோவிலும் இடம் பெற்றுள்ளார்.

இந்த வீடியோக்கள் வைரல் செய்வதற்காகத் திட்டமிட்டு எடுக்கப்படும் ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என்பது தற்போது தெரியவந்தது. முதியவர் திருமணம் செய்வதாக வைரலாகும் வீடியோ போலியானது என்பது குறிப்பிடத்தக்கது.   

gold-price-today-chennai