தம்மாத்துண்டுக்கு அவ்ளோ பில்டப்பு .. லோகேஷை கலாய்த்த மான்சூர் - இன்று அந்தர் பல்டி!
நடிகர் மன்சூர் லோகேஷின் படத்தை பற்றி பேசியுள்ளார்.
லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் மன்சூர் அலிகான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இது குறித்து மன்சூர் நேற்று அளித்த பேட்டியில், "தம்மாத்தூண்டு ரோலுக்கு அம்மாம் பெரிய பில்டப்பு” என்று லோகேஷ் கனகராஜை விமர்சித்திருந்தார்.
இது சமூக வலைத்தளத்தில் வைரலாகியது பலரும் இது தொடர்பாக மீம்ஸ் வெளியிட்டு லோகேஷ், மன்சூர் அலிகான் இருவரையும் ட்ரோல் செய்து வந்தனர்.
அறிக்கை
இந்நிலையில், அவர் நேற்று பேசியது குறித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "யாவோரும் இன்புற்றிருக்க நினைப்பது வேயின்றி யாமொன்றறியேன் பராபரமே! குண்டு போட்டு மனிதம் கொல்லும் நரமாமிச பட்சிகளின் உலக அரசியல் மன அழுத்தத்தில், நேற்று மீம்ஸ் போன்று நான் போட்ட பதிவு என்னையே அதிர்ச்சியடைய வைத்தது.
‘லியோ’வில் ‘தம்மாத்தூண்டு' என்ற சொல் பதம் என்னையே நான் மன்னிக்க முடியாதவனாக ஆக்கிவிட்டது! அதற்காக லோகேஷ், அவரது குழுவினர் சக்தி, சந்தோஷ், நிமெட், கௌதம். பாலா, ராம்குமார் ஆகியோர் எவ்வளவு மெனக்கெட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
லோகி ஒரு திரைச் சித்தன். 3000 பேரை வைத்து வேலை வாங்குகையில், இருக்கிற இடம் தெரியாமல் நாமெல்லாம் கைபேசியை வைத்து மகிழ்ச்சிக்கு பயன்படுத்துகையில், அவர் அது போன்ற உபகரணங்களை பாத்திரங்களை படைப்பதற்கு,
சதா சிந்தனையுடன் தேனியைப் போன்று செயலாற்றுவது கண்டேன்" என்று லோகேஷின் பெருமையை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.