கள்ளக்காதல்.. அவர் வேலையை காட்டிட்டார், ஆதாரங்களுடன் பார்த்துள்ளேன் - அம்பலப்படுத்திய பிரபலம்!
சிவகார்த்திகேயன் சர்ச்சை குறித்து பிரபலம் ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
சர்ச்சை
தமிழ் சினிமாவின் முன்னணி இசை இயக்குனரான இமான் தனது முதல் மனைவி மோனிகா ரிச்சர்டை கடந்த 2021-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அமலி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும் அதனால், இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து வெளிப்படையாக சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும் என்றும் இமான் கூறினார். அதன்பிறகு இது குறித்து பலர் பலவிதமாக பேசி சர்ச்சையை கிளப்பினர்.
பிரபலம் பேட்டி
இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். அதில், "சினிமா நடிகர்கள் என்றாலே பெர்சனல் வாழ்க்கையில் கள்ளக்காதல், தொழிலில் கருப்பு பணம் என்பது எழுதப்படாத விதியாக இருக்கும். அவர்களது வாழ்க்கையில் இவை இரண்டையும் தவிர்க்க முடியாது.
ஒன்றிரண்டு பேர் விதிவிலக்காக இருக்கிறார்கள். இமானுக்கு சிவகார்த்திகேயன் செய்தது நம்பிக்கை துரோகம். ஏனெனில் ஒருவர் உங்களை தம்பி மாதிரி பாவித்து வீட்டில் இடம் கொடுத்தால் அந்த இடத்தில் ரொம்பவே கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும்.
அங்கு சென்று கேடுகெட்ட வேலையை காட்டியுள்ளார் அது மன்னிக்க முடியாத விஷயமாகும். இமான் ரொம்பவே அப்பாவியானவர். இந்த விஷயம் பற்றி பல மாதங்களுக்கு முன்பே எனக்கு தெரியும்.
இருவருக்கும் பொதுவான நண்பர் ஒருவரை எனக்கு தெரியும். அவர்தான் என்னிடம் இந்த விஷயத்தை ஆதாரங்களுடன் என்னிடம் பகிர்ந்தார்"