ரஜினிக்கு அடுத்தவன் மனைவி தான் செட்டாகும் - ஆதங்கத்தை கொட்டித்தீர்த்த மன்சூர்

Rajinikanth Tamil Cinema Mansoor Ali Khan
By Sumathi Jun 22, 2024 02:30 PM GMT
Report

ரஜினி குறித்து மன்சூர் அலிகான் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இந்திய அளவில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவரது நடிப்பில் கடைசியாக லால் சலாம் படம் வெளியானது. தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

rajinikanth

இந்தப் படம் அக்டோபரில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார். இந்நிலையில், மேடை ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான், ரஜினிக்கு 70, 80 வயது ஆகிவிட்டது. அதனால் அவருக்கு ஹீரோயின் தேடுவதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

ஷாட்'ல அப்படி இல்ல..திடீர்'னு ரஜினி அங்க கிள்ளிட்டாரு - போட்டுடைத்த துணை நடிகை

ஷாட்'ல அப்படி இல்ல..திடீர்'னு ரஜினி அங்க கிள்ளிட்டாரு - போட்டுடைத்த துணை நடிகை

ரஜினி வயது

ஒன்று அடுத்தவன் பொண்டாட்டியா இருக்கணும். அதாவது 20, 25 வயதில் ஹீரோயினை அவருக்கு ஜோடியாக்க முடியாது. திருமணமான நடிகைகள் தான் அவருக்கு செட் ஆகும் என்ற வகையில் சொல்கிறேன். யாரும் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம். உதாரணமாக ஐஸ்வர்யாராயை எடுத்துக் கொள்ளலாம்.

mansoor alikhan

ஆனால் அவருக்கும் இப்போது வயதாகி விட்டது. தயாரிப்பாளர்களும் கோடி கணக்கில் இவர்களை தேடித்தான் செல்கிறார்கள். இப்படி போகும் பட்சத்தில் சின்ன பட்ஜெட் படங்களின் நிலைமை படு மோசமாக போகின்றது.

அதனால் சின்ன பட்ஜெட் தானே என்று நினைக்காமல் உள்ளே இருக்கும் அந்த கதையை பாருங்கள். அதுவும் உங்களை ஒரு விதத்தில் ரசிக்க வைக்கும் என ஆதங்கம் தெரிவித்துள்ளார்.