ஷாட்'ல அப்படி இல்ல..திடீர்'னு ரஜினி அங்க கிள்ளிட்டாரு - போட்டுடைத்த துணை நடிகை
அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினியுடன் நடித்ததை குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார் பெர்னா.
ரஜினி
காட்சிகளை எப்படி மெருகேற்றுவது என்பதில் நடிகர் ரஜினி கைதேர்ந்தவர் என்றே கூறலாம். ஒரு கட்சியை எப்படி ரசிகர்களுக்கு பிடிக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும் என தெரிந்த காரணத்தால் தான் அவர் சூப்பர்ஸ்டார்.
இதற்கு ஒரு உண்மை சம்பவமும் உள்ளது. அருணாச்சலம் படத்தில் 5 ஸ்டார் ஹோட்டலில் கடைசியாக தங்கி பணத்தை செலவழித்து வரும் ரஜினியை, அவரது பணம் தீர்ந்த பிறகு ரூமில் உறங்கி கொண்டிருக்கும் போதே ஹோட்டலின் மேனேஜர் எழுப்பி வெளியே அனுப்புவார்.
தலைவரும் எமோஷனலாக நடந்து செல்வார். லாஜிக்காக யோசித்தால், ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் எங்காவது மேனேஜர் வந்து காசு முடிஞ்சிடுச்சு வெளியே போங்கள் என கூறுவார்கள். இந்த காட்சியை இவ்வாறு அமைத்தது ரஜினி தான். அதனை இயக்குனர் சுந்தர்.சி'யே தெரிவித்துள்ளார்.
கன்னத்தை கிள்ளினார்...
அப்படி காட்சி நுட்பங்கள் தெரிந்த ரஜினி அண்ணாத்த படத்தில் துணை நடிகை ஒருவரின் கன்னத்தை செல்லமாக கிள்ளியுள்ளார். இது குறித்து அந்நடிகையே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து வருமாறு.
அண்ணாத்த படத்தில் ரஜினி சாருடன் பாடல் காட்சியில் நடித்த போது, வெறும் சீன் மட்டும் தான் என்று சொன்னார்கள் என குறிப்பிட்ட அவர் துணை நடிகை பெர்னா, ஆனால் அக்காட்சி எடுக்கப்பட்ட போது, சட்டென ரஜினி சார் என் கன்னத்தை புடிச்சு கிள்ளிட்டாரு என பகிர்ந்தார்.