500 ரூபாய் தான்...எங்க வேணாலும் போவேன்'னு சொன்னாங்க..ஆனா விஷயமே வேற - பவித்ரா வேதனை
சமீபத்திய பேட்டியில் ஆரம்பகட்டத்தில் தான் சந்தித்த கஷ்டங்களை நடிகை பவித்ரா லட்சுமி தெரிவித்துள்ளார்.
பவித்ரா லட்சுமி
மாடலிங் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. அதன் பிறகு "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார். பின்னர் நாய் சேகர் என்ற படத்தின் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
மேலும், யூகி மற்றும் ஜிகிரி தோஸ்த்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ரசிகர்களின் கவனம் பெற்ற நடிகையாக இருக்கும் பவித்ரா லட்சுமி, அண்மை பேட்டி ஒன்றில் ஆரம்ப காலகட்டத்தில் ஏன் மேடைகளிலும்,
கிராமங்களில் நிகழ்ச்சிகளிலும் டான்ஸ் ஆட போனீர்கள் என்ற கேள்வியை தன்னிடம் பலரும் கேட்டதை குறிப்பிட்டு அதற்கு பதிலளித்துள்ளார்.
500 ரூபாய்க்கு
அந்த நிகழ்ச்சிகளில் டான்ஸ் ஆடுவதற்கு சம்பளம் காரணம் அல்ல என குறிப்பிட்டு, அப்படிப்பட்ட நிகழ்ச்சியின் மூலமாக ஒரு அங்கீகாரம் கிடைத்து விடாதா? என்பதாலேயே தான் பங்கேற்றதாக கூறினார்.
ஆனால் சிலர் அதனை காசு கொடுத்தா நீ என்ன வேணாலும் பண்ணுவியா? காசுக்காக எங்க வேணாலும் போவியா? போன்றெல்லாம் கேட்கிறார்கள் என வேதனை தெரிவித்தார்.
ஆனால், அந்நிகழ்ச்சியில் அவ்வளவு காசு கிடைக்காது என்று கூறி, 8 மணி நேரம் நடனமாடினால் தான் தங்களுக்கு 500 ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டு, அந்த சம்பளத்தை தாண்டியும் அதில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற காரணத்திற்காக தான் நடனமாடியதாகவும் குறிப்பிட்டார்.