எடப்பாடியை முதல்வர் ஆக்குவதெல்லாம் பாஜக நோக்கமல்ல; இதுதான் ரகசியம் - முன்னாள் அமைச்சர் தாக்கு
அதிமுக-பாஜக கூட்டணி ரகசியம் குறித்து மனோ தங்கராஜ் பேசியுள்ளார்.
அதிமுக-பாஜக
பாஜக - அதிமுக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், அண்ணாமலைக்கு பதிலாக நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "2026-ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழாது என்பது பாஜகவிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே தெரியும்! அதிமுகவிற்கு ஆட்சியை பிடித்து கொடுத்து எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவது பாஜகவின் நோக்கமல்ல.
மனோ தங்கராஜ் பதிவு
அதிமுகவை தன்வசம் வைத்துக் கொண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற ஆர்எஸ்எஸ் - பாஜக இணைந்து நடத்தியிருக்கும் சூழ்ச்சி ஆட்டம் தான் தற்போதைய கூட்டணி நாடகமும், மாநிலத் தலைவர் மாற்ற நாடகமும்.
மாநிலங்களவையில் தங்களது ஆதரவை பெருக்குவது தான் பாஜகவின் மறைமுக திட்டம். அதிகாரத்தை கைப்பற்ற எப்பேர்ப்பட்ட கீழ்த்தர செயலையும் செய்யலாம் என்ற பாசிச கோட்பாட்டின் பிரதிபலிப்பே அண்ணாமலை பதவி பறிப்பு" எனத் தெரிவித்துள்ளார்.