அது மட்டும் இல்லைனா படுக்கையறை காட்சியில் நடிக்கவே முடியாது - மனிஷா கொய்ராலா ஓபன் டாக்!
தனது குடி பழக்கம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்துள்ளார்.
மனிஷா கொய்ராலா
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. முதல் படத்திலேயே அழகாலும், துறு துறு நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தார்.

தொடர்ந்து உடனே ஜாக்பாட்டாய் அமைந்தது ஷங்கரின் இந்தியன் திரைப்படம். அதில் தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்டதால், அடுத்த படமான முதல்வனிலும் ஹீரோயினாக வாய்ப்பு வழங்கினார். அப்போது கொடி கட்டிப் பறந்தார் மனிஷா கொய்ராலா.
அதனையடுத்து மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார்.
குடி பழக்கம்
இதையடுத்து கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்டார். 'ஹவ் கேன்சர் கிவ்மீ எ நியூ லைஃப்' என்ற புத்தகத்தை எழுதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், முன்னதாக இவர் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் பொழுது எனக்கு அளவுக்கு அதிகமான தயக்கம் மற்றும் வெட்கம் இருந்தது. இதனால் ஒரே காட்சியை பலமுறை டேக் எடுக்க வேண்டி இருந்தது. அப்படியான நேரத்தில் அந்த தயக்கம், வெட்கம் ஆகியவற்றை போக்குவதற்காக குடிக்க ஆரம்பித்தேன்.
குடித்தால் தான் படுக்கையில் ரொமான்ஸ் காட்சிகளை செய்ய முடியும் என்ற சூழ்நிலைக்கு அழைத்து செல்லப்பட்டேன்.
இந்த பழக்கம் அப்படியே அதிகரித்து நாள்தோறும் குடிப்பதற்கு ஆரம்பித்து விட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan