மதுவுக்கு அடிமையானேன்.. அது இல்லனா தூக்கமே வராது - பிரபல நடிகை பளீச்!
மதுவுக்கு அடிமையானது குறித்து நடிகை மனிஷா கொய்ராலா மனம் திறந்துள்ளார்.
மனிஷா கொய்ராலா
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. முதல் படத்திலேயே அழகாலும், துறு துறு நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தார். தொடர்ந்து உடனே ஜாக்பாட்டாய் அமைந்தது ஷங்கரின் இந்தியன் திரைப்படம்.
அதில் தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்டதால், அடுத்த படமான முதல்வனிலும் ஹீரோயினாக வாய்ப்பு வழங்கினார். அப்போது கொடி கட்டிப் பறந்தார் மனிஷா கொய்ராலா. அதனையடுத்து மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மதுவுக்கு அடிமை
2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார். இதையடுத்து கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்டார். 'ஹவ் கேன்சர் கிவ்மீ எ நியூ லைஃப்' என்ற புத்தகத்தை எழுதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கேமராவுக்கு முன் தைரியமாக நடிக்க மது அருந்த தொடங்கினேன். அது நாளடைவில் பழக்கமாக மாறி மதுவிற்கு அடிமையாகி விட்டேன். சில நேரம் மது குடித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைமையாகி விட்டது.
மதுவால் வாழ்க்கையே அழிந்து நாசமாகவிட்டது. அதன் பின், புற்றுநோய் பாதிக்கப்பட்டு வாழ்க்கையில் பாடத்தை கற்றுக்கொண்டேன் என மனம் திறந்துள்ளார்.