இந்தியன் 2-ல் நடிக்க நோ சொன்ன காஜல்... ரீப்ளேஸில் இந்த பிரபல பாலிவுட் நடிகையா?
இந்தியன் 2 படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன் 2
பிரம்மாண்ட இயக்குனர் என்று அறியப்படும் ஷங்கர் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியன் திரைப்படத்தை இயக்கினார் . இது வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது . இதில் கமல்,மனிஷா கொய்ராலா, சுகன்யா, செந்தில், கவுண்டமணி என்று பலரும் நடித்திருந்தனர்.
கமலஹாசன் இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக 2019 ஆம் ஆண்டு லைக்ரா ப்ரோடுக்ஷன் தயாரிப்பில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
காஜல் அகர்வால்
இயக்குனர் ஷங்கர் மற்றும் கமல் இணைந்து படப்பிடிப்பை தொடங்கிய நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் உயிர் சேதம் ஒன்று நடந்தது. மேலும் கொரோனா பொது முடக்கம் போன்ற காரணங்களால் படம் சுமார் 3 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் ராம் சரணின் படத்தில் பிசியாகி உள்ளதால், விரைவில் செப்டம்பர் மாதம் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
தீபிகா படுகோனே
இதில் ஏற்கனவே நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார், சமீபத்தில் குழந்தை பெற்றுள்ளதால் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். ஆதலால் அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனேவை வைத்து படத்தை ஷூட் செய்யலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் படக்குழுவினர் தற்போது தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.