ஒப்பந்தத்தில் மறுப்பு தெரிவித்த ஷங்கர் - கமலின் ‘இந்தியன் 2’ படம் கைவிடப்படுகிறதா? வெளியானது அதிர்ச்சி
தகவல் திட்டமிட்டபடி ‘இந்தியன் 2’ பட வேலைகள் தொடங்கவில்லை என்றால், படத்தை கைவிட லைக்கா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. 70 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ளது. ஆனால், விபத்து ஏற்பட்டு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு கொரானா பிரச்சனை, கமல் அரசியல் பிரவேசம் உள்ளிட்ட சில காரணங்களால் இன்றுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதனால் பொறுத்து பார்த்த ஷங்கர், ராம் சரணை வைத்து தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் டென்ஷனான லைக்கா, ‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல் வேறு படங்களை இயக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. ஆனால் சமீபத்தில் ‘இந்தியன் 2’ பட பிரச்சனையில் ஷங்கர் மற்றும் லைக்கா தயாரிப்பு நிறுவனம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனையடுத்து, மீதமுள்ள படத்தை படமாக்க ஷங்கர் ஒரு பட்ஜெட்டை லைக்காவிடம் கூறினாராம். அதை ஒத்துக்கொண்ட லைக்கா, குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் ஷங்கர் தரப்பு கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனால் திட்டமிட்டப்படி இந்தியன் 2 படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போது, இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது சந்தேகமே என்று கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிப்பட்டுள்ளன. ஷங்கர் சொன்னபடி படத்தை தொடங்கவில்லை என்றால் படத்தை கைவிட முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இத்தகவல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.