படுக்கையறைக் காட்சிகளில் அதை போட்டுப்பேன்; அதுவே அடிமையாகிருச்சு.. மனிஷா கொய்ராலா ஓபன்டாக்!
நடிகை மனிஷா கொய்ராலா மது பழக்கம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
மனிஷா கொய்ராலா
மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மனிஷா கொய்ராலா. முதல் படத்திலேயே அழகாலும், துறு துறு நடிப்பாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பிடித்தார்.

தொடர்ந்து உடனே ஜாக்பாட்டாய் அமைந்தது ஷங்கரின் இந்தியன் திரைப்படம். அதில் தனது நடிப்பின் மூலம் கட்டிப்போட்டதால், அடுத்த படமான முதல்வனிலும் ஹீரோயினாக வாய்ப்பு வழங்கினார். அப்போது கொடி கட்டிப் பறந்தார் மனிஷா கொய்ராலா.
மது பழக்கம்
அதனையடுத்து மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2010ல் சாம்ராட் தேகல் என்பவரை திருமணம் செய்து கொண்டு, கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார். இதையடுத்து கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்டார்.

'ஹவ் கேன்சர் கிவ்மீ எ நியூ லைஃப்' என்ற புத்தகத்தை எழுதி புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் அல்லாமல் படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் போது ஒரு பெக் போட்டுக் கொள்வேன் என்றுள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப காலங்களில் எந்த பயமும் இல்லாமல் இது போன்ற காட்சிகளில் நடிப்பதற்காக ஒரு பெக் அடிக்க ஆரம்பித்து அந்த பழக்கம் அதிகரிக்கவே அடிமையாகிவிட்டார் எனத் தெரியவருகிறது.
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil
ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படவுள்ள திட்டம் : யாழ்ப்பாணம் உட்பட ஐந்து மாவட்டங்களில் திறக்கப்படவுள்ள அலுவலகங்கள் IBC Tamil