அந்த லேடி ஆங்கர்தான் பிரச்னை; நான் வேலை தெரிஞ்சவ.. மணிமேகலை வீடியோ வைரல்!

Star Vijay Cooku with Comali Manimegalai
By Sumathi Sep 15, 2024 06:44 AM GMT
Report

குக் வித் கோமாளியில் இருந்து தான் வெளியேறுவதற்கான காரணம் குறித்து மணிமேகலை பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி

விஜே மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டா பக்கத்தில், மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் எப்பொழுதும் கடின உழைப்பையும் நான் கொடுப்பேன்.

manimegalai

அதேபோலதான் 2019 நவம்பரில் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியுடன் எனது பயணம் தொடங்கியது. ஆனால் தற்போது இந்த நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன். சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமில்லை. என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன்.

நீங்க கர்ப்பமா; உண்மை உடைத்த மணிமேகலை - ரசிகர்கள் ஆர்வம்!

நீங்க கர்ப்பமா; உண்மை உடைத்த மணிமேகலை - ரசிகர்கள் ஆர்வம்!

விஜே மணிமேகலை

புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் என எதுவாக இருந்தாலும், சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் இத்தருணத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன். தொகுப்பாளரின் வேலையை செய்ய விடாமல், நிறைய குறுக்கீடுகளை செய்கிறார்.

அந்த லேடி ஆங்கர்தான் பிரச்னை; நான் வேலை தெரிஞ்சவ.. மணிமேகலை வீடியோ வைரல்! | Manimegalai Quit Cook With Comali For Priyanka

நமது உரிமைகளைக் கேட்பதும், கவலையை எழுப்புவதும் கூட இந்தப் சீசனில் குற்றமாகிவிடுகிறது. ஆனால் யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அதற்கு நான் குரல் எழுப்புவேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மணிமேகலை வெளியேற பிரியங்கா தேஷ்பாண்டே தான் காரணம் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.