நீங்க கர்ப்பமா; உண்மை உடைத்த மணிமேகலை - ரசிகர்கள் ஆர்வம்!

Pregnancy Cooku with Comali Manimegalai
By Sumathi Apr 01, 2023 01:30 PM GMT
Report

கர்ப்பம் குறித்த கேள்விக்கு மணிமேகலையே பதில் கூறியுள்ளார்.

 மணிமேகலை

பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.

நீங்க கர்ப்பமா; உண்மை உடைத்த மணிமேகலை - ரசிகர்கள் ஆர்வம்! | Manimegalai Open Up About Pregnancy

இதற்கு சிவாங்கி, தங்கதுரை, ஸ்ருத்திகா உள்ளிட்டோர் வருத்தத்தையும் தெரிவித்து வருங்கால திட்டங்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர். மேலும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் செய்திகள் வெளியாகியது.

கர்ப்பம்?

இந்நிலையில், ரசிகர் ஒருவர் மணிமேகலையிடம் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர் இல்லை. நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதெல்லாம் வதந்தி.

நீங்க கர்ப்பமா; உண்மை உடைத்த மணிமேகலை - ரசிகர்கள் ஆர்வம்! | Manimegalai Open Up About Pregnancy

நான் கர்ப்பம் இல்லை. எந்த ஒரு நியூஸா இருந்தாலும் அது ஏதோ ஒரு 4 யூடிப் சேனல் சொல்லி உங்களுக்கு தெரியுற மாதிரி இருக்காது. நானே தான் சொல்வேன் என பதில் அளித்துள்ளார்.