மணிமேகலை கர்ப்பம் - குக் வித் கோமாளியில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதானா?
மணிமேகலை கர்ப்பமாக இருப்பதால் உடல்நிலையை கருத்தில் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.
மணிமேகலை
பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மணிமேகலை. தற்போது 4ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை அறிவித்தார்.
இதற்கு சிவாங்கி, தங்கதுரை, ஸ்ருத்திகா உள்ளிட்டோர் வருத்தத்தையும் தெரிவித்து வருங்கால திட்டங்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ளனர். அது போல் செஃப் பட் மணிமேகலை சிறந்த பெண் கோமாளி. நான் உங்களுடன் குக் வித் கோமாளி செட்டுகளில் சிறந்த நேரத்தை செலவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளி
இவர் ஏன் விலகினார் என்ற கேள்விதான் தற்போது ஹாட் டாப்பிக்காக உள்ளது. இதற்கு பலர் விரைவில் குக்காக அடுத்த சீசனில் கலந்து கொள்வார் என்றும், அவர் கர்ப்பமாக இருப்பதால் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில், அவர் பதிவில் கூட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை. 3 ஆண்டுகளாக வாய்ப்பு கொடுத்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பெயர்களை கூட அவர் குறிப்பிடவில்லை. இதனால் ஏதோ பிரச்சினை இருக்கலாம் என தெரிகிறது.