எனக்கு குழந்தை பிறந்தா... விஜே மணிமேகலை பகீர் தகவல்!
தனக்கு குழந்தை பிறந்தால் என்ன செய்வார் என்பது குறித்து விஜே மணிமேகலை மனம் திறந்துள்ளார்.
மணிமேகலை
கடந்த 2010-ஆம் ஆண்டு சன்மியூசிக்கில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் மணிமேகலை. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.
இவர் ஹுசைன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவீட்டாரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இருவீட்டாரும் ஏற்று கொண்டனர். சன்டிவியில் இருந்து 2019-ம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானர்.
குழந்தை பிறந்தா?
அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகயாக பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மணிமேகலை, பாரதி கண்ணம்மா சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ள மணிமேகலை சமூகலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருவார். குறுகிய காலத்திலேயே புதிய வீடு, கார் என வாங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சமீபமாக அளித்த பேட்டி ஒன்றில்,
தனக்கு குழந்தை பிறந்தால் அது விஜய் டிவிக்குத்தான் சொந்தம். விஜய் டிவிக்கு தன்னுடைய குழந்தையை சொந்தமாக்கும் அளவுக்கு நல்லது செய்துள்ளது என தெரிவித்துள்ளார். தற்போது இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.