மணிமேகலையினை நீக்கினாரா மணி ரத்னம் : வந்தியத்தேவன் மணிமேகலை காதல் கதை தெரியுமா ?

Ponniyin Selvan: I Mani Ratnam
By Irumporai Apr 28, 2023 07:44 AM GMT
Report

பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்தவுடனே  சிங்கிள்ஸ் அதிமகாக கொண்டாடுவது ஆதித்த காரிகாலனைத்தான், காரணம் ஆதித்தன் நந்தினி மீது வைத்த காதல் தோல்வியால் தன் வாழ்க்கை முழுவதுமே சோழதேசத்திற்கு அர்ப்பணித்தான் , ஆகவே அவனது காதலை அனைவரும் கொண்டாடுகின்றனர், ஆனால் கதையின் நாயகன் வந்தியத்தேவன் உயிரை காப்பாற்றி அவனையே ஒருதலையாக காதலித்து அவனுக்காக உயிரை விட்டு தியாக சிகரமான மணிமேகலையின் காதல் குறித்து உங்களுக்கு தெரியுமா ? கல்கியின் காவியத்தை ஒரு வேளை நீங்கள் படித்திருந்தால் தெரிந்துதிருக்கலாம், வாருங்கள் தெரிந்துகொள்வோம் மணிமேகலையினையும் அவளது காதல் கதையினையும்.

மணிமேகலை பொன்னியின் செல்வன்

 யார் இந்த மணிமேகலை?   மணிமேகலை கடம்பூர் சம்புவரையர் சிற்றரசரின் மகள். சம்புவரையர் மாளிகையில் அவள் வைத்ததே சட்டமென இருக்கிறது. இவளுடைய சகோதரனான கந்த மாறன், தன்னுடைய நண்பன் வந்தியத்தேவனுக்கு மணிமேகலையைத் திருமணம் செய்விக்க எண்ணுகிறான்.

மணிமேகலை வந்தியத்தேவன் காதல்

அதனால் அடிக்கடி வந்தியத்தேவனின் வீரத்தினை அவளிடம் கூறுகிறான். வெளியில் அதை வெறுப்பதாக நடித்தாலும், வந்தியத்தேவன் மீது மணிமேகலைக்குக் காதல் வருகிறது. மனதிலேயே வந்தியத்தேவனை மணந்து, இல்லறம் நடத்துகிறாள். தன் தோழிகளிடம் வந்தியத்தேவனின் வீர பராக்கரமங்களை எடுத்துரைக்கிறாள். தோழிகள் அனைவருக்கும் மணிமேகலை வந்தியத்தேவனைக் காதலிப்பது தெரிய வருகிறது.

மணிமேகலையினை நீக்கினாரா மணி ரத்னம் : வந்தியத்தேவன் மணிமேகலை காதல் கதை தெரியுமா ? | Ponnien Selvan Manimagali Movie

ஆனால் காலம் அப்படியே செல்லவில்லை மணிமேகலை கடம்பூர் சம்புவரையர் சிற்றரசரின் மகள். சம்புவரையர் மாளிகையில் அவள் வைத்ததே சட்டமென இருக்கிறது. இவளுடைய சகோதரனான கந்த மாறன், தன்னுடைய நண்பன் வந்தியத்தேவனுக்கு மணிமேகலையைத் திருமணம் செய்விக்க எண்ணுகிறான். அதனால் அடிக்கடி வந்தியத்தேவனின் வீரத்தினை அவளிடம் கூறுகிறான்.

மணிமேகலை மரணம்

வெளியில் அதை வெறுப்பதாக நடித்தாலும், வந்தியத்தேவன் மீது மணிமேகலைக்குக் காதல் வருகிறது. மனதிலேயே வந்தியத்தேவனை மணந்து, இல்லறம் நடத்துகிறாள். தன் தோழிகளிடம் வந்தியத்தேவனின் வீர பராக்கரமங்களை எடுத்துரைக்கிறாள். தோழிகள் அனைவருக்கும் மணிமேகலை வந்தியத்தேவனைக் காதலிப்பது தெரிகிறது.

சம்புவரையர் மாளிகையில் விருந்தினராக வரும் நந்தினியுடன் மணிமேகலை நட்பு கொள்கிறாள். பெண்ணாக இருந்தாலும் நந்தினியை திருமணம் செய்து இல்லறம் நடத்த கூட தான் தயார் என்று கூறுகிறாள். அதனை மறுத்த நந்தினி மணிமேகலை விரும்புவது வந்தியத்தேவனை என்பதை அறிந்து அவனையே திருமணம் செய்துகொள் என்கிறாள்.

மணிமேகலையினை நீக்கினாரா மணி ரத்னம் : வந்தியத்தேவன் மணிமேகலை காதல் கதை தெரியுமா ? | Ponnien Selvan Manimagali Movie

அதற்கு தடையாக தன்னுடைய தகப்பனாரும், தமயனும் இருப்பதை பற்றி நந்தினியிடம் எடுத்துரைக்கின்றாள் மணிமேகலை. மாளிகைக்கு தான் வந்ததே, ஆதித்த கரிகாலனை மணிமேகலைக்கு திருமணம் செய்விக்கவே என்று நந்தினி கூறினாலும், மணிமேகலைக்கு நந்தினியின் மீது பற்று அதிகமாகிறது. இருவரும் இணைந்து நீராட செல்கின்றார்கள்.

அங்கு அடிப்பட்ட புலி அவர்களை தாக்க வரும்போது, கரிகாலனும், வந்தியத்தேவனும் அவர்களை காக்கின்றார்கள். பொழுது போவதற்காக மணிமேகலை யாழ் இசைத்து பாடல் பாடுகிறாள். ஆதித்த கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கினங்க காதல்பாடல்களை பாடும் மணிமேகலை, வந்தியத்தேவனையே பார்த்துக் கொண்டே பாடுகிறாள்.

ஆத்தித்த கரிகாலன் கொலை

வந்தியத்தேவனுக்கு ஆபத்து என்று நந்தினி கூறியதை உண்மையென நம்பி சம்புவரையர் மாளிகையிலிருந்து அவனை தப்புவிக்க ஏற்பாடு செய்கிறாள். ஆனால் வந்தியத்தேவன் வேட்டை மண்டபத்தில் ஒளிந்திருக்கும் பாண்டிய ஆபத்துதவிகளை காண செல்கிறான்.

அவனை காப்பாற்றும் பொருட்டு மணிமேகலையும் உடன் செல்கிறாள். ஆதித்த கரிகாலனை நந்தினி உள்ளிட்ட ஆபத்துதவிகள் கொன்றுவிடுகின்றார்கள். அங்கே இருந்த வந்தியத்தேவனை கந்தன் மாறனும், சம்புவரையும் கொலையாளியாக நினைக்கின்றார்கள்.

அவனை காப்பாற்ற தானே ஆதித்தனை கொன்றதாக கூறுகிறார் மணிமேகலை. வந்தியத்தேவனை தஞ்சை சிறையில் அடைத்ததும், அங்கே வந்து குந்தவையிடம் தான் ஆதித்தனை கொன்றதாக கூறுகிறார். அத்துடன் ஆதித்த கரிகாலன் தனக்கு எழுதிய ஓலையை கொடுக்கிறாள்.

அதில் வந்தியத்தேவன் மீது எந்தவொரு குற்றமும் இல்லை என்பதை ஆதித்த கரிகாலனே குறிப்பிட்டுள்ளார். இவர்கள் சென்று மீட்பதற்குள் வந்தியத்தேவன் தப்பித்துவிடுகிறான். அவனை தொடர்ந்து சென்ற கந்தன் மாறன் மதுராந்தகன் மேல் வேலை பாய்த்துவிட்டு, வந்தியத்தேவனை கொன்றுவிட்டதாக மணிமேகலையிடம் கூறுகிறான்.

அதைக் கேட்டு கோபம் கொண்ட மணிமேகலை தன்னுடைய கத்தியை எடுத்து கந்தன்மாறனை கொலைசெய்ய முற்படுகிறாள். வந்தியத்தேவனையை கந்தன் மாறன் கொன்றுவிட்டதாகவும், அதனால் தான் கந்தன் மாறனை கொன்றுவிட்டதாகவும், இருவரும் இறந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்கின்றாள்.

இதற்கிடையே சோழதேசத்தின் ராஜமாதாவாக கருதப்படும் செம்பியன் மாதேவி மணிமேகலையினை  கோவில்களுக்கு அழைத்து செல்கிறாள். ஆனால் வழியில் இரவு தங்குமிடத்திலிருந்து மணிமேகலை காணாமல் போகிறாள் .

நெடுநாட்கள் தேடியும் கிடைக்காமல் இருக்கும் மணிமேகலை கிடைத்துவிட்டதாகவும், அவளை இறுதிமுறையாக வந்தியத்தேவன் சந்திக்கவேண்டும் என்றும் கந்தன் மாறன் ஓலை அனுப்புகிறான்.

மணிமேகலையினை நீக்கினாரா மணி ரத்னம் : வந்தியத்தேவன் மணிமேகலை காதல் கதை தெரியுமா ? | Ponnien Selvan Manimagali Movie

வந்தியத்தேவனை தன் காதலன் என்று மனிமேகலை கூறியபோதிலும் அவள் மீது குந்தவை பொறாமை காட்டவில்லை. இந்த முதிர்ச்சியும், சிந்தனைத் தெளிவும்தான் நாவலில் வரும் மற்ற பெண்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது.

மணிமேகலை குறித்து வந்தியத்தேவனிடம் குந்தவை பேசும்போதும் ​​பொறாமையின் அறிகுறிகளே அவளிடம் இருக்காது ஏனென்றால், தன் காதலனின் அன்பை உறுதியாக நம்புகிறார் . காட்டினுள் பித்துப் பிடித்தவள் போல சுற்றிக் கொண்டிருந்த மணிமேகலையைக் கண்டுபிடித்த கந்தமாறனைச் சந்திக்க கடம்பூருக்குச் செல்லும்படி அவள் வந்தியத்தேவனை அனுப்புகிறாள்.

மணிமேகலை உடலும் மனமும் நன்றாக இருந்திருந்தால், குந்தவை அவளை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வந்தியத்தேவனை கண்டிப்பாக சொல்லியிருக்கலாம் ஓர் இளவரசி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு குந்தவை உண்மையிலேயே ஒரு சிறந்த உதாரணம்.

கல்கி பொன்னியின் செல்வனில் மணிமேகலை இறப்பு குறித்து கூறியிருப்பார் அதில் வந்தியத்தேவன் மீது மணிமேகலையின் காதல் நமக்கு புரியும்.

மணிமேகலையின் முகம் சிறிது நேரம் தெய்வீகமான சோபையினால் ஜொலித்தது. அவளுடைய நீண்ட கண்களிலிருந்து வெண்ணிலவின் கிரணங்கள் வீசிப் பிரகாசித்தன. மாதுளை மொட்டை நிகர்த்த அவளுடைய இதழ்கள் விரிந்து ஏதேதோ மதுரமான சொற்களைப் பொழிந்தன.

வந்தியத்தேவன் எவ்வளவோ கவனமாகக் கேட்டான். ஆனால் அவள் என்ன சொன்னாள் என்பதை மட்டும் அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதற்காகத் தெரிந்து கொள்ள வேண்டும்? அவள் கூறியவை என்ன வார்த்தைகளாயிருந்தால் என்ன? இதயமாகிய பொற் கலசம் திறந்து அன்பாகிய அமுதம் பொங்கி வரும்போது வெறும் சொற்களின் உபயோகம் என்ன?

சிறிது நேரத்துக்கெல்லாம் மணிமேகலையின் கனி இதழ்கள் குவிந்தன. கண்ணிமைகள் மூடின. முகத்தில் தவழ்ந்த தெய்வீக சோபை குன்றியது. அமைதி குடிகொண்டது. நீராழி மண்டபத்தின் மேலே படர்ந்திருந்த மரக்கிளையின் மீது இளந்தென்றல் வீசியது.

மணிமேகலை மரணம்

மரக்கிளையில் குலுங்கிய செந்நிற மலர்களில் சில உதிர்ந்தன. மணிமேகலையின் உயிரும் அவளுடைய உடலிலிருந்து உதிர்ந்தது. உடலைப் பிரிந்த உயிர் எங்கே சென்றது? எவ்வழியே சென்றது? மந்தமாருதத்துடன் கலந்து சென்றதா? இளங்காற்றில் எழுந்த சிற்றலைகளின் இனிய ஓசையில் ஏறிச் சென்றதா? இதய தாபம் தொனிக்கப் பாடிய பூங்குயில்களின் மதுரகீதத்துடன் ஒன்றாகி விண்ணில் பறந்து சென்றதா? எங்கே சென்றது?

சகல புவனங்களையும் சகல ஜீவராசிகளையும் ஆக்கி அளித்து அழிக்கும் பரம்பொருளின் பாதார விந்தத்துக்குச் சென்றதா? அல்லது கண்ணீர் பெருக்கும் கற்சிலை போல் நினைவற்று உட்கார்ந்திருந்த வந்தியத்தேவனுடைய உள்ளத்திலேதான் கலந்து போய் விட்டதா? யாருக்கும் தெரியாது. தெரிந்தாலும் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் நிச்சயம். வேடிக்கையும் விளையாட்டும், குறும்பும் குதூகலமும், துணிவும், துடுக்கும், துணிச்சலும் உருக்கொண்டவனாக இருந்த வந்தியத்தேவனை இனி நாம் காணப்போவதில்லை.

கனிந்த உள்ளமும், கருணையும், விவேகமும் வந்தியத்தேவனை அந்தக் கணத்தில் வந்து அடைந்தன. மணிமேகலையாகிய தெய்வம் அவன் இதயக்கோவிலில் குடிகொண்டாள்.

இனி அவன் எங்கே சென்றாலும், என்ன காரியம் செய்தாலும் அந்தத் தெய்வம் அவனுக்குத் துணை புரியும். வல்லவரையன் வந்தியத்தேவன் நல்ல பணிகள் பல செய்ய வல்லவனாவான். அவனை அறிந்த அனைவராலும் வந்தனை செய்வதற்கு உரியவனாக விளங்குவான். வீரனே!

உன்னிடமிருந்து தற்சமயம் விடைபெற்றுக் கொள்கிறோம். உன் துயரம் நிறைந்த சிந்தனைகளில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை.

 இவ்வுளவு சிறப்பாக கல்கியால் எழுதப்பட்ட மணிமேகலை காதாபாத்திரம் ஏனோ பொன்னியின் செல்வனில் இல்லை ஒரு வேளை நேரம் காலம் கருதி மணியும்.. மணிமேகலையினை கைவிட்டாரா ?

மணிமேகலையினை நீக்கினாரா மணி ரத்னம் : வந்தியத்தேவன் மணிமேகலை காதல் கதை தெரியுமா ? | Ponnien Selvan Manimagali Movie

ஆனால் கல்கியின் தியாக சிகரத்தில் குறும்புத்தனமும் சகசமும் நிறைந்த வந்தியத்தேவனை மனிதனாக மாற்றியது மணிமேகலைத்தான் என கல்கி தனது நாவலின் கடைசி வரியில் கூறியிருப்பார்.