20 ஆண்டுகள்; தனியார் பள்ளிகளை புறக்கணிக்கும் கிராமம் - அதுவும் இந்தியாவில்..
கிராமம் ஒன்று 20 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளை புறக்கணித்து வருகிறது.
அரசு பள்ளி
கர்நாடகா, மாண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் மதிகவுடனா கொப்பலு என்ற கிராமம் உள்ளது. இங்கு 120 வீடுகள் உள்ளன.
இங்குள்ள மக்கள் அரசு பள்ளியை (கன்னட நடுநிலைப் பள்ளி)காப்பாற்றவும், வளர்க்கவும் முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதன்படி, இந்த அரசுப் பள்ளியை காப்பாற்றவும், கன்னட மொழியை வளர்க்கவும்
மக்கள் முடிவு
இந்த ஊர் மக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்ற முடிவை கடைபிடித்து வருகின்றனர். இந்த ஊருக்கு தனியார் பள்ளி வாகனமும் வர முடியவில்லை. இப்பள்ளியில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள், பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் நல்ல பணியில் இருப்பதால், தம்மூரில் உள்ள தங்களது அரசுப் பள்ளிக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து அரசோடு கைகோர்த்து வருகின்றனர்.
இங்கு கற்றல் தரம் எந்த ஒரு தனியார் பள்ளியை விடவும் குறைவாக இல்லை. கடந்த 20 ஆண்டுகளாக இந்த கிராமத்தின் எந்த குழந்தையும் கான்வென்ட்டில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.