நொடியில் நடந்த சம்பவம் - நடுங்கிய செங்கல்பட்டு அரசு பள்ளி மாணவர்கள்!
செங்கல்பட்டு அருகே ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளியின் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்து 6 மாணவர்களுக்கு காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
செங்கல் பட்டு மாவட்டம் சிறுதாவூரில் ஊராட்சி அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது பள்ளியின் கட்டட மேற்கூரைதிடீரென இடிந்து விழுந்தது.
இந்த சம்பவத்தில்,வகுப்பறையில் அமர்ந்திருந்த 6 மாணவர்களுக்கு காயம் அடைந்தனர். உடனடியாக அம்மாணவர்களை மீட்டு திருப்போரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவின் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
6 மாணவர்கள் காயம்
அப்போது கடந்த சில தினங்களாக அங்கு பெய்து வரும் கனமழையால் கூரையில் மழைநீர் சேர்ந்ததாகவும், அதனால் பாரம் தாங்காமல் கட்டடம் இடிந்துவிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இக்கட்டடம், கடந்த 2015 -16ஆம் ஆண்டுதான் ‘அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் கீழ் ரூபாய் 13 லட்சத்தில் பொதுப்பணித்துறையினரால் கட்டப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
கட்டப்பட்டு 8 ஆண்டுகளில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளதால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் . மேலும் நல்ல முறையில், புதிய கட்டடம் கட்டித் தர கோரிக்கை விடுத்துள்ளனர்.